கொரோனா பரவலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சூழலில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியுய மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பிரச்சாரக் கூட்டங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதையும், தனிமனித விலகலைப் பின்பற்றுவதையும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதுகுறித்து அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். இதனிடையே அனைத்து அரசியல் கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், மனுவுக்கு உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Comments