நாகூரில் துணி துவைத்துக் கொடுத்து ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

0 3158
நாகூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர், துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் வாக்காளருக்கு துணிகளை துவைத்துக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.

நாகூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர், துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் வாக்காளருக்கு துணிகளை துவைத்துக் கொடுத்து ஆதரவு திரட்டினார்.

நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தங்ககதிரவன், நாகூர் வண்டிபேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்து கொண்டிருப்பதை பார்த்த வேட்பாளர், அவரை நகரச் சொல்லிவிட்டு அதில் ஒரு துணியை துவைத்துக் கொடுத்தார்.

துவைக்கும் இடத்தில் அமர்ந்து, துணிக்கு சோப்பு போட்டு, துவைத்து, அலசி பிழிந்து அனைவரையும் ஈர்த்தார். மறந்துவிடாமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நாகூரில் அதிமுக வேட்பாளர் துணி துவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments