மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைப் பேச்சு: தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

0 2720

மணல் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், தடையின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம், அதிகாரிகள் யாரும் தடுக்க முடியாது ஒரு வேளை அதிகாரிகள் தடுத்தாலும் தனக்கு போன் செய்யலாம் என பேசியிருந்தார். செந்தில்பாலாஜியின் இந்த பேச்சு மணல் கடத்தலை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும், செந்தில் பாலாஜியின் இந்தப் பேச்சுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதனிடையே, தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது வன்முறையை தூண்டுதல், பொதுப் பணியாளர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments