திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

0 1562
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 40 சதவீத இடஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்காலத்தின் சாதனைகளை கூறி பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி, சாத்தான்குளம், பொள்ளாச்சி என அதிமுக ஆட்சியில் வேதனைகளே அதிகம் என குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் நிறைவேற்றபட்ட திட்டங்களை எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், இதேபோல சாதனைகளை பட்டியலிட்டு அதிமுகவினர் வாக்குகளை கேட்கமுடியுமா? என கேள்வி எழுப்பினர். தூத்துகுடி மற்றும் சாத்தான்குளம் விவகாரங்களையும் அவர் விவரித்தார்.

 இளைஞர்களுக்கு துறைவாரியாக வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அரசுப் பணிகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்திற்கான வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments