’ஜெயலலிதா பெயரை வைத்து ஓட்டு கேட்காதீர்கள்’ அதிமுக எம்.எல்.ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

0 2426
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் ஓட்டு கேட்க சென்ற எம்.எல்.ஏவிடம் ஜெயலலிதா பெயரை பயன்படுத்த வேண்டாம் என பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் ஓட்டு கேட்க சென்ற எம்.எல்.ஏவிடம் ஜெயலலிதா பெயரை பயன்படுத்த வேண்டாம் என பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ சந்திரசேகரனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிடும் அவர், சேந்தமங்கலம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.

மலைவேப்பன்குட்டை பகுதியில் சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெண் ஒருவர், ஜெயலலிதா பெயரை வைத்து ஓட்டு கேட்காதீர்கள் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் வந்தவர் ஆவேசமாகப் பேசியும், அசராமல் அந்த பெண் வாக்குவாதம் செய்தார். அவரை சமாளிக்க முடியாமல், உன் ஓட்டே வேண்டாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments