இந்தியாவில் நேற்றுப் புதிதாக 46,951 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1276
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 46 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 46 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 646 ஆக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரேநாளில் 30 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 ஆக உள்ளது.

இந்திய அளவில் கொரோனா பரவல், தற்போதைய நோயாளிகள் எண்ணிக்கை இரண்டிலும் மகாராஷ்டிர மாநிலம் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.

நேற்று மாலை வரை நாட்டில் நாலரைக்கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments