மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்

0 76383
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்

தமிழகம் முழுவதும் கடந்த 11 நாட்களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களாக தினசரி 500-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் தொடங்கியுள்ளது. 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 11 நாட்களில் சென்னையில் புதிதாக 3,907 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1015 பேருக்கும், கோவையில் 886 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 637 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 508 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 321 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 285 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments