மியான்மர் எல்லைக்கு சீல் வைத்துள்ள இந்தியா !

0 10175

மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளின் அனைத்து எல்லைகளையும் இந்தியா சீல் வைத்துள்ளதோடு அகதிகள் நுழைவதை தடுக்க உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா நேற்று மியான்மர் வெளியுறவுத் துறை  அமைச்சர் ஜின் மார் ஆங்குடன் காணொளி மூலம் அங்கு நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முதலமைச்சர் சோரம்தங்கா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த கடினமான காலங்களில் மியான்மருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மியான்மர் அகதிகளுக்கு நாட்டில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments