சாலை பாதுகாப்பு 20 ஓவர் தொடரில் கோப்பையை கைப்பற்றியது இந்திய லெஜண்ட்ஸ் அணி

0 3717
உலக சாலைப் பாதுகாப்பு 20 ஓவர் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி, கோப்பையை கைப்பற்றியது.

உலக சாலைப் பாதுகாப்பு 20 ஓவர் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி, கோப்பையை கைப்பற்றியது.

ராய்பூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, தில்சன் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யூசுப் பதான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments