அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுக பொய்ப் பரப்புரை - முதலமைச்சர்

0 1022

அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என, உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை தி.மு.க. செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருவதாகவும், அரசு கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அம்மா மினி கிளினிக் ஆகியவை துவங்கப்பட்டு உள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

2019ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்ததைக் குறிப்பிட்ட முதலமைச்சர்.இதில் தமிழகம் இந்திய அளவில் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு 304 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருவதாகவும், இதன்மூலம் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதன் மூலம் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று திமுக பொய்ப் பரப்புரை செய்வதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments