காக்க.. காக்க ... சிறுவனை காத்த அசத்தல் போலீஸ்..!

0 4480
காக்க.. காக்க ... சிறுவனை காத்த அசத்தல் போலீஸ்..!

சென்னை அடுத்த மாமல்லபுரம் கடலில், அலையால் இழுத்துச்செல்லப்பட்டு தத்தளித்த 2 குழந்தைகளை 3 ஆயுதப்படை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில், வடமாநிலத்தை சேர்ந்த இரு குழந்தைகள் கடல்அலையில் இழுத்துச்செல்லபட்டு வெளியேவர இயலாமல் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் ஷரிபிரசாத், தனபாலன், ரவி அவர்கள் மூவரும் தாமதிக்காமல், தங்கள் உயிர்களை துச்சம் என்று நினைத்து, கடலில் குதித்து அந்த இரு குழந்தைகளையும் பத்திரமாக காப்பாற்றி கரைசேர்த்தனர்.

காவல்துறையினரின் வீரமிக்க மீட்பு பணியை நேரில் கண்ட சுற்றுலாப் பயணிகள் அந்த காவல்துறையினரை மனதார பாராட்டினர். காவலர்கள் சேவை நம் சமூகத்துக்கு எப்போதும் தேவை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக மாறி இருக்கின்றது இந்த அதிரடி மீட்பு சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments