ஐநாவில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 2263

ஐநாவில் நடைபெறும் இலங்கையின் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் திங்கட்கிழமை தீர்மானம் கொண்டு வரப்படுவதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு ஆதரவாக வாக்களிப்பதுடன், இலங்கையின்போர்க்குற்ற விசாரணை,சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்லும் வகையில், உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி, உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments