தமிழகத்தில் 3 - ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

0 2237
தமிழகத்தில் 3 - ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில்  கொரோனா பாதிப்பு 3 - ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டி, படிப்படியாக உயர்ந்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 289 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 668 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், சென்னை பெருநகரில் புதிதாக 466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்கல்பட்டில் 138பேரும், கோயம்புத்தூரில் 109 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments