மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் அமித்ஷா

0 1407
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் அமித்ஷா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், சங்கல்ப் பத்ரா ('Sankalp Patra') என பெயரிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை  அவர் வெளியிட்டார். மேற்குவங்க மாநில அரசுப் பணிகளில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, மாநிலத்தில் 3 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்தபின் அமைச்சரவையை கூட்டி, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தப்படும் என்றும் பாஜக அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மார்ச் 27-ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments