ராணுவ வலிமையில் உலகில் நான்காமிடத்தில் உள்ளது இந்தியா

0 8117
ராணுவ வலிமையில் உலகில் நான்காமிடத்தில் உள்ளது இந்தியா

இந்தியா ராணுவ வலிமையில் உலகில் நான்காமிடத்திலும், பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாமிடத்திலும் உள்ளது.

மிலிட்டரி டைரக்ட் இணையத்தளம் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, படைவீரர்களின் எண்ணிக்கை, படைக்கலன்கள், கருவிகள், படைவீரர்களின் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும் உள்ளன. ரஷ்யா மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காமிடத்திலும் உள்ளன. பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரிட்டன் ஒன்பதாமிடத்திலும் உள்ளன. பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன.

அமெரிக்கா ஆண்டுக்கு 53 லட்சம் கோடி ரூபாயும், சீனா 18 லட்சத்துத் தொண்ணூறாயிரம் கோடி ரூபாயும், இந்தியா 5 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயும் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்குகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments