திமுக - அதிமுகவினரிடையே நேற்றிரவு அரங்கேறிய மோதல்... திமுகவினர் மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் சாலை மறியல்

0 1858

கரூரில் திமுக - அதிமுக இடையிலான மோதல் விவகாரத்தில் திமுகவினரை கைது செய்யக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு கரூர் மாவடியான் கோவில் பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்ற நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பிலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, இன்று அதிமுகவினர் கரூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வந்து சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே இந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுகவினரை திமுக எம்.பி.கனிமொழி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments