காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஊழல் மட்டுமே வளர்ந்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0 1847
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஊழல் மட்டுமே வளர்ந்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மத்தியிலும், அசாமிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஊழலும், மக்கள் நலன் புறக்கணிப்பும் இரண்டு மடங்காக அதிகரித்தன என பிரதமர் மோடி கூறினார்.

அசாம் மாநிலம் போகாகட்டில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது, தற்போது மத்தியிலும், அசாமிலும் பாஜக அதிகாரத்தில் இருப்பதால், மாநிலத்தின் வளர்ச்சி இரண்டு மடங்காகி உள்ளது என்றார்.

ஏழை மக்களிடம் பொய்களை கூறி ஆட்சியை பிடிக்கும் வழக்கம் காங்கிரசிடம் உள்ளது என்ற அவர், காங்கிரஸ் என்றாலே நிலைத்தன்மை இல்லாதது, ஊழல் நிறைந்தது  என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments