சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

0 1988
சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வினோஜ்.பி.செல்வத்தின் வேட்புமனு நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மறுபரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வேட்பு மனு தாக்கலின் போது அவர் சமர்ப்பித்த வாக்காளர் அடையாள அட்டையில் வினோஜ் என்ற பெயரே உள்ள நிலையில், வேட்பு மனு பிராமாண பத்திரத்தில் வினோஜ் (எ) வினோஜ் பி செல்வம் என குறிப்பிட்டிருந்தார். பெயர்கள் மாறுபட்டு இருந்ததால் வேட்பு மனுவை நிறுத்தி வைத்த தேர்தல் நடத்தும் அதிகாரி, இன்று காலை 11 மணிக்குள் பெயர் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பிக்கும் படி கூறினார்.

இதனையடுத்து வினோஜ் பி செல்வம் 10, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்தார். அதில் வினோஜ் பி செல்வம் என பெயர் இருந்ததால் அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனிடையே வேட்பு மனு மறுபரிசீலனையின் போது தங்களையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க கோரி திமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பாரதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments