பெங்களூருவில் 20 நாட்களில் வைரஸ் தொற்று 400 சதவிகிதம் அதிகரிப்பு

0 2768
பெங்களூருவில் 20 நாட்களில் வைரஸ் தொற்று 400 சதவிகிதம் அதிகரிப்பு

பெங்களூருவில் கடந்த 20 நாட்களில் கொரோனா தொற்று 400 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத துவக்கத்தில் 210 ஆக இருந்த தினசரி வைரஸ் தொற்று இப்போது ஆயிரத்தை தாண்டி விட்டது. இதே வேகத்தில் போனால், வரும் 26 ஆம் தேதி வாக்கில்  இந்த எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் கர்நாடகாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் துவங்கி விட்டது என இது வரை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால் அரசு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நிலைமை கையை மீறி போய் விடும் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதே இந்த திடீர் உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments