நடிகரும் மக்கள் உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பல்வேறு உடல்நல சோதனைகள் நடத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments