தமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு

0 1086
தமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு

புயல், வெள்ளம், வறட்சி, கொரோனா என எந்த பாதிப்பு வந்தாலும் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் விவசாயிகளை கண்ணின் இமை காப்பது போல் காத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக வரலாற்றில் முதல் முறையாக வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் என்றார்.

தமிழகம் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்துள்ளது என்றும், விவசாயிகளுக்கு அரசு எதுவுமே செய்யாமல் எப்படி 100 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும்? என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரையும் விமர்சித்தார்.

தொகுப்பு வீடுகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்க இருப்பதாகக் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments