மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை வெளியீடு

0 679
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேரதலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை வெளியிடுகிறார்.

எட்டு கட்டங்களாக நடக்க உள்ள, மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்களில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பூர்ப மெதினிபூர் மாவட்டம் பள்ளிகாய் என்ற இடத்தில் அமித் ஷா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேச உள்ளார்.

அப்போது பாஜக தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுவார்  என கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments