ஈக்குவடாரில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா : கொரோனா மருந்து ஊழல் புகார் தொடர்பாக ராஜினாமா எனத் தகவல்

0 921
ஈக்குவடாரில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா : கொரோனா மருந்து ஊழல் புகார் தொடர்பாக ராஜினாமா எனத் தகவல்

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் சுகாதாரத்துறை அமைச்சர் ரொடோல்ஃபோ ஃபார்டென் (Rodolfo Fardan) பொறுப்பேற்ற 19 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அந்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து வாங்கியதில் ஊழல் நடந்த புகார் குறித்து தலைநகர் குயிட்டோவில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து ஃபார்டென் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு முன்னதாக பதவியில் இருந்த ஜுவான் கார்லோசும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments