திமுகவினர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக பாஜகவினர் புகார் : தங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகக் திமுகவினர் புகார்

தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக திமுகவினரை கைது செய்யக்கோரி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கோடம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தியாகராயநகர் தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் அருகில் உள்ள வன்னியர் தெருவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகக் கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.
Comments