மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது எப்படி? விசாரணையைத் தொடங்கினர் சிஐடி அதிகாரிகள்

0 1966
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக அம்மாநில சிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக அம்மாநில சிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்த போது, தான் தாக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால் மம்தாவுக்கு ஏற்பட்டது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட விபத்து என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த விவேக் சஹாவை தேர்தல் ஆணையம் நீக்கியது.

காலில் கட்டுப் போட்டபடி மம்தா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே மம்தா தாக்கப்பட்டாரா அல்லது விபத்தில் காயமடைந்தாரா என்பது குறித்து மாநில சிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments