தூத்துக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

0 1264
தூத்துக்குடியில் உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேனில் கொண்டுச் செல்லப்பட்ட  9 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.

வாகைகுளம் சுங்கச்சாவடியில் நேற்று இரவு அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ஒரு வேனை மறித்து சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி 9 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த வேனுக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த மதுரையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் இருந்த துப்பாக்கிக்கான உரிமம் 5 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments