சீன தடுப்பூசி போட்டுக் கொண்ட பாக். பிரதமருக்கு கொரோனா - குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

கொரோனா பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் தடுப்பூசியை செலுத்தப்பட்ட நிலையில் அவருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கொரோனா பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி டிவிட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளார்
Comments