மனைவிக்கு படம் காட்டிய.. ஆபாச ஐடி மாப்பிள்ளை..! புழல் ஜெயிலில் விருந்து..!

0 167952

தாம்பத்யத்தின் போது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்த ஐடி ஊழியரை சைபர் க்ரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க வில்லனான விபரீத கணவன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியத்தில் 40 வருடங்களுக்கு மேலாக தோல் வியாபாரம் செய்துவரும் பீகாரை பூர்வீகமாக கொண்ட செல்வந்தரின் இளையமகன் சபீக் அகமது.

திறமையான மென்பொறியாளரான சபீக் அகமது ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை பிரிந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 3 வதாக ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஐதராபாத் பெண்ணை சாதி டாட்காம் என்ற திருமண இணையதளம் மூலம் பார்த்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் இது 3 வது திருமணம் என்று கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு பிறகு சபீக் அகமது விபரீத பழக்கம் ஒன்றை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது. தன் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடுவதை செல்போனில் படம் எடுக்கும் சைக்கோ தனத்தை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு வீட்டில் இருந்து பணி செய்த காலத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பது பிடிக்காமல் அவரை அழைத்துச்சென்று கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளார். அவரது டார்ச்சர் தாங்க இயலாமல் அந்த பெண் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.

அந்த நிலையில் தான் பயன்படுத்தும் லேப்டாப்பில் தாம்பத்யத்தின் போது எடுக்கப்பட்ட அந்தரங்க படங்களை சேமித்து வைத்திருந்த சபீக் அகமது தனது மூன்றாவது மனைவிக்கு போன் செய்து மீண்டும் தன்னுடன் வந்து குடித்தனம் நடத்தவரவேண்டும் வர மறுத்தால் தன்னிடம் உள்ள நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் அந்தரங்க புகைபடங்களையும் இணையத்தில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடில்லாமல் அந்த ஆபாச படம் ஒன்றை தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்து அவரை கடுமையாக அச்சுருத்தி உள்ளான் சபீக்.

இதையடுத்து அதிர்ந்து போன அந்த பெண், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில் இது குறித்து விசாரித்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சபீக் அகமதுவை கைது செய்து அவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் மட்டுமில்லாமல், முதல் மற்றும் 2 வது மனைவியின் வீடியோக்களும் சிக்கியது.

விசாரணையில், சாதி டாட் காம் மூலம் முதலில் கான்பூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இது போலவே வீடியோ எடுத்துள்ளான் சபீக், அந்த பெண் அவனை விட்டு பிரிந்து சென்ற பின்னர் இதே போல வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் கான்பூர் போலீசில் சபீக் மீது அவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து 2 வதாக பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை தங்கள் வழக்கப்படி திருமணம் செய்து கொண்டு அவரிடமும் தனது தாம்பத்ய வீடியோ சேட்டையை காட்ட தொடங்கி இருக்கிறான் சபீக், அந்த பெண் பிரிந்து சென்ற போது அவரிடமும் மிரட்டலை தொடர்ந்துள்ளான். பெங்களூரிலும் சபீக் மீது புகார் உள்ள நிலையில், சென்னை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளான் சபீக் அகமது.

அவனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர் வில்லங்க மாப்பிள்ளை சபீக் அகமதுவை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பெண்கள் தனது கணவனக இருந்தாலும் தாம்பத்யத்தை வீடியோ எடுக்க அனுமதிக்ககூடாது என்று எச்சரிக்கும் காவல்துறையினர், செல்போனில் எடுத்து அழிக்கப்பட்ட அந்த மாதிரி வீடியோக்கள், செல்போனை பழுது பார்க்கும் கடைகளில் இருந்து கூட எளிதாக இணையதளங்களுக்கு சென்று விடும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments