அனைத்துத் துறைகளிலும் விருதுகள் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான் - தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

0 2050
அனைத்துத் துறைகளிலும் விருதுகள் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான் - தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

னைத்துத் துறைகளிலும் விருதுகள் வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வானூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட முதல்வராகலாம் என்று கூறிய முதலமைச்சர், திமுகவில் அதுபோல ஆக முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், எல்லாத் துறைகளிலும் விருது வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று பெருமிதத்துடன் கூறினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் வானூர் தொகுதியில் அதிமுக அரசு அமைத்த அரசு கலைக் கல்லூரி, மீனவர்கள் பகுதியில் தூண்டில் வளைவு போன்ற திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் விக்கிரவாண்டி,மயிலம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments