தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - இரவு 9 மணி நிலவரம் : 3100க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் ஏற்பு

0 1371
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - இரவு 9 மணி நிலவரம் : 3100க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் ஏற்பு

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட  வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனையில், சனிக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி, 3102 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, சுமார் 2 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மும்முரமாக ஈடுபட்டனர்.

மொத்தம் 7 ஆயிரத்து 240 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆண் வேட்பாளர்கள் 6170 பேரும், பெண்கள் 1067 பேரும், திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும், வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments