அடுப்பூத ஆக்டிங் திமுக ஆக்டிவ்..! சொல்லிக் கொடுத்தும் நடிப்பு வரல

0 5915
அடுப்பூத ஆக்டிங் திமுக ஆக்டிவ்..! சொல்லிக் கொடுத்தும் நடிப்பு வரல

வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கியாஸ் விலை உயர்வால் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாக நடிக்க வைத்து திமுகவினர் வாக்கு சேகரித்த கலகலப்பான சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரான மருத்துவர் முத்துராஜா திருவப்பூர் பகுதியில் கூட்டணி கட்சியினர் புடைசூழ வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்

அப்பொழுது ஒரு வீட்டில் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களது வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்த வேட்பாளர் முத்துராஜா கையில் அடுப்பூதும் குழலை எடுத்துக் கொண்டார், அவரது ஆதரவாளர்கள், சமையல் கேஸ் விலை உயர்வால் மீண்டும் பழையபடி விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருப்பதாக கூறுமாறு அந்த பெண்ணுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தனர்.

முதல் டேக் ஓகே ஆகாத நிலையில், இரண்டாவது, மூன்றாவது டேக் வாங்கிய அந்த இல்லத்தரசிக்கு நடிப்பே வராது என்ற முடிவிற்கு வந்த திமுக வேட்பாளர் உள்ளிட்ட பிரச்சார குழுவினர், அந்த பெண்ணுக்கு பதிலாக முடிவில் அவர்களே, கோரசாக அடுப்பூதும் நிலைக்கான காரணத்தை சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments