எம்.ஜி.ஆர் டெக்னிக் எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகாது..! மிரளும் குழந்தைகள்

0 3339
எம்.ஜி.ஆர் டெக்னிக் எல்லோருக்கும் ஒர்க் அவுட் ஆகாது..! மிரளும் குழந்தைகள்

தேர்தல் பிரசாரத்தின் போது வீடு வீடாக வாக்கு கேட்டு செல்லும் வேட்பாளர்கள், பெண்களை கவர்வதற்காக குழந்தைகளை தூக்கி கொஞ்சினால், குழந்தைகள் மிரளும் சம்பவங்கள் தொடர்கின்றன. எல்லோருக்கும் எம்ஜிஆர் டெக்னிக் ஒத்துவராத பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ் சினிமா நாயகர்களில் முதன்முதலாக சிறுவர் சிறுமிகளை கவர்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..! அவரது பாணியில் தற்போதுள்ள நாயகர்கள் பலர் சிறுவர், சிறுமிகளை கவர்ந்தாலும் அரசியல் பிரமுகர்கள் என்றால் சிறுவர்கள் அஞ்சி ஓடுவது தொடர்கின்றது.

அந்தவகையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி தனது ஆதரவாளர்களுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட போது, கையில் ஆரத்தியுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்கள் அவரை வரவேற்றனர்.

அப்போது ஒரு பெண்ணின் கையில் வைத்திருந்த குழந்தையை தூக்கி கொஞ்ச முயன்ற போது அந்த குழந்தை தாயிடம் இருந்து வேட்பாளரிடம் செல்ல அடம் பிடித்து கதறி அழ ஆரம்பித்தது.

பின்னர் அருகில் இருந்த நிர்வாகியின் உதவியுடன் அந்த குழந்தையை அப்படியே தாயிடம் ஒப்படைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் முயற்சியை கைவிடாத வேட்பாளர் சிவகாமசுந்தரியோ அடுத்ததாக மூதாட்டியை அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இதே போல செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்த கட்சி பிரமுகர் ஒருவர் வீட்டிற்கு வெளியில் நின்ற தாய்மார்களிடம் துண்டு பிரசுரம் கொடுக்கச்செல்ல அங்கிருந்த சிறுவன் அவரை கண்டு அஞ்சிய மன நிலையில் காணப்பட்டான்

அங்கேயே நின்று அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததால் மிரண்டு போன சிறுவன் அரண்டு போய் வீட்டிற்குள் ஓட்டம் பிடித்தான்.குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, பதிலுக்கு குழந்தைகள் சிரித்து மகிழ்வது எல்லாம் திரையில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சாத்தியம் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments