ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்களோடு, தேர்தல் வாக்குறுதிகளும் சேர்த்து நிறைவேற்றப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

0 1329
ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்களோடு, தேர்தல் வாக்குறுதிகளும் சேர்த்து நிறைவேற்றப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

மிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், ஏற்கனவே உள்ள மக்கள் நலத்திட்டங்களோடு, தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளும் சேர்த்து நிறைவேற்றப்படும் என, துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, தியாகராயர் நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா எனப்படும் சத்யநாராயணன், விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் விருகை ரவி ஆகியோரை ஆதரித்து, ஓ.பி.எஸ் வாக்குச்சேகரித்தார். 

சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு ஆதரவாக டி.பி.சத்திரம் பகுதியில் ஓ.பி.எஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.

கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை ஆதரித்தும், திருவிக நகர் தொகுதி த.மா.கா வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் ஓ.பி.எஸ் வாக்குச்சேகரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments