தொகுதிகள் தோறும் ஸ்டாலின்... தேர்தலுக்காக தீவிர பிரசாரம்!

0 1548
தொகுதிகள் தோறும் ஸ்டாலின்... தேர்தலுக்காக தீவிர பிரசாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் போது, நீர் நிலைகள் - இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒரேநாளில் அவர், 16 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தின் போது  பேசிய அவர், 14 வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக இணைத்துக் கொண்டு, படிப்படியாக வளர்ந்து இந்த இயக்கத்தின் தலைவனாக பொறுப்பேற்று உள்ளதாக கூறினார். 

சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீனவ சமுதாயத்தினரை - கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு திமுக முயற்சி எடுக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.  மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும்  தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட மத்திய அரசை தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments