தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி

0 2102
தேமுதிக துணை செயலாளர் சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிபடியாக உயர்ந்து தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகவேகமாக நடந்து வருகின்றனர்

அதேவேளையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையிலும் மக்களிடையே அரசியல் கட்சிகள் மக்கள் கூட்டத்தின் நடுவில் பிரசாரம் செய்து வருகின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் சுதீஷூக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான சில அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சுதீஷூக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக கூட்டணியில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் தேமுதிக, 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், தேமுதிகவின் முக்கிய பேச்சாளராக உள்ள துணைச் செயலாளர் எல்.கே சுதீஷூக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments