லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அரசின் சேவைகளைப் பெறமுடிகிற நிலை உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

0 2076
லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அரசின் சேவைகளைப் பெறமுடிகிற நிலை உள்ளது

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்கிற நிலை உள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையால் முடக்கப்பட்ட 48 லட்ச ரூபாயை விடுவிக்கக் கோரி ராஜேஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முடக்கப்பட்ட பணம் ஊழலில் சம்பாதித்தது அல்ல என்றும், நில விற்பனையில் கிடைத்தது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிவடையாததால் தொகையை விடுவிக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

ஊழல் வழக்குகளைப் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது, ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments