இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்புத்துறையில் ஆகச்சிறந்த கூட்டாளிகள்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1408
இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்புத்துறையில் ஆகச்சிறந்த கூட்டாளிகள்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நீடிக்கும் பரஸ்பர நல் உறவுகள் மூலம், 21ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கூட்டாளிகளாக இந்தியாவும், அமெரிக்காவும் விளங்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின்(Llyod Austin), தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தார். சனிக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்தவும், ராணுவ உறவை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டாக அறிவித்தனர்.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments