பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 1927
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனை பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபைசல் சுல்தான் (Faisal Sultan) தனது டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். அதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி, தமது இல்லத்திலேயே, சுயதனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், இம்ரானுக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments