கொரோனா விதிகள் மீறப்பட்டதா? விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கூச்சல் குழப்பம்!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பத்திரிக்கையாளர் ஒருவரை படக்குழுவினர் தாக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை என்ற தகவலறிந்து அங்கு சென்று படம்பிடித்த பத்திரிக்கையாளர் ஒருவரை படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் சக பத்திரிக்கையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் அங்கு வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்ட நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வந்து சமாதானம் செய்ய முயன்றார்.
மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments