புதுச்சேரியில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேருநகர், மூகாம்பிகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
முதலியார்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சம்பத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிதோறும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி தேங்காய்த்திட்டு என்னுமிடத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
மணவெளி தொகுதி பாஜக வேட்பாளர் ஏம்பலம் செல்வம் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அவரை வரவேற்றனர்.
Comments