அவசரமாக படிக்கட்டில் ஏறியதால் தடுக்கி விழுந்தார் அதிபர் பைடன்
விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். அவர் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். அவர் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அங்குள்ள ஆசிய-அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்டார். விமானத்தின் படிக்கட்டுகளில் அவசரம் அவசரமாக அவர் ஏறியதால் 2 முறை தடுக்கியதுடன், கடைசியாக தடுக்கி விழுந்தே விட்டார். ஆனாலும் 78 வயதான பைடன் தற்போது நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Comments