தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏற்கனவே 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 29 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏற்கனவே 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 29 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை பிருந்தாவனம் மெட்ரிக் பள்ளியில் 14 பேர், தஞ்சையில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளியில் 15 பேர் என 29 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக கொரோனா தொற்று பரவிய 11 பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கொரோனா பரவ காரணமாக இருந்ததாக, அம்மாபேட்டை லெஜிலியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒரு பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments