இந்தியாவில் நேற்றுப் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2285
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின் மீண்டும் நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஒருநாளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின் மீண்டும் நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் வெள்ளியன்று புதிதாக நாற்பதாயிரத்து 953 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மட்டும் வெள்ளியன்று புதிதாக 25 ஆயிரத்து 681 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சோதனையை அதிகப்படுத்தியுள்ளதால் நேற்று ஒரே நாளில் பத்து லட்சத்து அறுபதாயிரத்து 971 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை 4 கோடியே 20 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments