'அட நீங்க வேற... அவரோட பேச்சை கேட்க யார் வந்தா...நாங்க அந்த கழுத்த பார்க்க வந்தோம்'- ஹரியை வைத்து பெண்கள் காமெடி

0 41213
கழுத்தில் நகைகளுடன் ஹரி

உலகின் பெரும் பணக்காரர்கள் பலர் இருக்கலாம். ஆனால், உலகிலேயே விலையுயர்ந்த கழுத்து ஹரியிடத்தில்தான் உள்ளது. ஏனென்றால், ஹரியின் கழுத்தில் மட்டும் 4.73 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தொங்குகின்றன. தற்போது, தேர்தல் பிரசாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹரியின் கழுத்தில் தொங்கும் நகைகளை பார்க்க பெண்கள் முண்டியடிக்கின்றனராம்.

பனங்காட்டுப்படை கட்சியின் நிர்வாகியான ஹரிநாடார், நெல்லை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார். நடமாடும் நகைக்கடையான அவரிடத்தில் ரூ. 4.73 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளன. அதோவது , 11 கிலோ 200 கிராம் நகைகள் உள்ளன. அசையும் சொத்து 12,61,19,403, மதிப்பில் அவரிடத்தில் உள்ளன. அசையா சொத்ததாக ரூ.11,50000 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. ஹரியிடம் இன்னோவா உள்ளிட்ட 6 கார்கள் உள்ளன. 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் ஹரி நாடார், ரைவல் ஏஜன்ஸி , சினிமா பைனான்ஸ், ரியல்எஸ்டேட் போன்ற பிசினஸ்களில் ஈடுபடுவதாக கூறுகிறார். சிறுவயது முதலே நகைகள் அணவிதில் ஹரிக்கு ஆர்வம் உண்டு. சந்தைக்கு எந்த நகை புதிதாக வந்தாலும் உடனடியாக அவற்றை வாங்கி விடுவார். கடந்த முறை நாங்குநேரி மக்களவை தேர்தலில் போட்யிட்டு 3 வது இடத்தையும் பிடித்தார். அப்போது, வேட்பு மனுவில் தன்னிடத்தில் 7.5 கிலோ தங்க நகை இருப்பதாக ஹரி கணக்கு காட்டியிருந்தார். தற்போது, மேலும் 3.7 கிலோ நகைகளை வாங்கி குவித்துள்ளார். கைகளில் விதவிதமான பிரெஸ்லெட், 10 விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருப்பார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஹரிநாடார், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னையில் வசித்து வரும் ஹரி இதற்காக ஆலங்குளம் தொகுதியில் முகாமிட்டுள்ளார். இந்த ஒட்டு மொத்த நகைகளையும் அணிந்து கொண்டுதான் ஹரி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆலங்குளம் தொகுதியில் உள்ள கிராமம் கிராமமாக நடந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாகவே, பெண்கள் நகை மீது ஆர்வம் அதிகம். அதிலும், ஒருவர் 5 கிலோ நகைகளை அணிந்து கொண்டு வந்தால் மொய்க்காமல் விட்டு விடுவார்களா என்ன?. அந்த வகையில் ஹரி நாடாரை பார்க்க பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது. இவருக்கு ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம் கூடுகிறது என்று ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.கவின் பூங்கோதையும், அ.தி.மு.கவின் மனோஜ் பாண்டியனும் தலையை பிய்த்துக் கொள்கிறார்களார். பின்னர்தான், பெண்களிடம் விசாரித்த போது, அவரோட பேச்சை கேட்கலாம் நாங்க வரல. அவர் கழுத்துல போட்டு போட்டுருக்காரே அந்த நகைகளை பார்க்க வந்தோம் என்று கூலாக பதில் சொன்னராம். அதற்கு பிறகுதான், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டதாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments