பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தி எனக்கூறி 13 வயது மாணவனை திருமணம் செய்த ஆசிரியை..

0 4825
பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தி எனக்கூறி, 13 வயது மாணவனை ஆசிரியை ஒருவர் மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தி எனக்கூறி, 13 வயது மாணவனை ஆசிரியை ஒருவர் மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜலந்தரைச் சேர்ந்த அந்த ஆசிரியை மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வந்தார். இந்த நிலையில், அவரது ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாகவும், சிறுவனை திருமணம் செய்து பின்னர் விதவைக் கோலம் தரிக்க வேண்டும் என்றும் குடும்ப ஜோசியர் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தன்னிடம் டியூசன் படித்த சிறுவனை ஒரு வார காலம் வீட்டில் தங்க வைத்து அவனைத் திருமணம் செய்துள்ளார் ஆசிரியை.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments