உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் வெளியீடு.. பின்லாந்து முதலிடம்; 139வது இடத்தில் இந்தியா

உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தில் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தில் இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 149 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், 2வது இடத்தில் ஐஸ்லாந்தும் 3வது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 139-வது இடத்திலும் பாகிஸ்தான் 105வது இடத்திலும் உள்ளன.
Comments