மத்திய பிரதேசத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு..!

0 3765
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்துமாறு முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகள் பகல் நேரத்தில் மூடப்பட்டிருக்கும் எனவும், நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments