தமது அரசு மீது களங்கம் சுமத்த முடியாது - முதலமைச்சர்
மக்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு திரட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலின்போது வாங்கிய மனுக்கள் என்னவாயிற்று எனக் கேள்வி எழுப்பினார். தமது ஆட்சியில் பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் என தி.மு.க. கூடுவிட்டு கூடு பாய்வதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி பற்றி ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்தார்.
அரியலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமது அரசு மீது களங்கம் சுமத்த முடியாது என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments