மகாராஷ்ட்ராவில் வேறு வழியே இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமலாகும் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்ட்ராவில் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்தது. இதையடுத்து மால்கள், திரையரங்குகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
வேறு வழியில்லாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பரவிய போது கையில் மருந்து ஏதும் இல்லாமல் இருந்தது.
இப்போது தடுப்பூசி வந்து விட்டதால் பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி போட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments