குஷ்புவுக்கு பின்னாடி அரசியல் சதி வேலை..! Ex, கவுன்சிலர் கற்பகம் திடுக்

0 8250

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை தோற்கடிக்க பின்னணியில் சதிவேலை நடப்பதாக அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவர் குஷ்புவிடமே எச்சரித்தார்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திரு வி க குடியிருப்பு,நக்கீரன் நகர், எம் கே ராதா நகர், கிரி அப்பா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் குஷ்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

தொடர்ந்து தேனாம்பேட்டை பகுதிக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரியம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் கற்பகம் குஷ்புவை சந்தித்து, அதிமுகவிற்கு நம்பி வந்தவர்களை வாழ வைக்க தான் தெரியும் ஆனால் பின்னால் இருந்து சிலர் வேற மாதிரி வேலை பார்க்கிறார்கள் என்றும் உங்களுக்கு பின்னாடி இருந்து தூண்டி விட்டு உங்களை தோற்கடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அனைவரும் நடிப்பார்கள் ஆனால் உங்களை ஜெயிக்க வைக்க யாரும் பணியாற்ற மாட்டார்கள். இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தான் உங்களை ஜெயிக்க வைப்பார்கள். உங்களுக்குப் பின்னால் சிலர் வேற மாதிரி வேலை பார்க்கிறார்கள் அது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ. சுந்தர் அண்ணாவிடம் நான் தனியாக பேசிக்கொள்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.

தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் குஷ்பு அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் மலர்தூவி பொன்னாடை போர்த்தி, ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். அப்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் என்று நடிகை குஷ்பு உறுதி அளித்தார். மேலும் நான் நடந்து வந்தால் பின்னால் நீங்கள் ஓடிவரவேண்டும் என்று உற்சாகப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments